இசேவை மற்றும் ஆதார் சேவை மைய ஊழியர்களுக்கு COVID-19 பாதுகாப்பு மற்றும் நிவாரணம் கோரி மனு.

Union of IT & ITES Employees (UNITE)

இசேவை மற்றும் ஆதார் சேவை மைய ஊழியர்களுக்கு COVID-19 பாதுகாப்பு மற்றும் நிவாரணம் கோரி மனு.

To,

The Editor in chief/ Chief Reporter,

Daily/Weekly/Visual Media,

Chennai.

பொருள்  : இசேவை மற்றும் ஆதார் சேவை மைய ஊழியர்களுக்கு COVID-19 பாதுகாப்பு மற்றும் நிவாரணம் கோரி மனு.

ஐயா வணக்கம்,

             COVID-19 கொரோனா வைரஸ் பல மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் இந்த சூழலில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இசேவை மற்றும் ஆதார் மையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமான ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் உள்ள  இசேவை மையத்தில் பணிபுரியக்கூடிய ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இதன் தொடர்ச்சியாக அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் உடன் பணிபுரியக்கூடிய ஊழியருக்கு தொற்று எளிதில் பரவக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இது மற்ற இ சேவை மையங்களில் வேலைசெய்யும் ஊழியர்களும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு கேபிள் நிறுவனம் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் திட்ட ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகள் அனைத்தும் அரசு கேபிள் டிவி கீழ் பணிபுரியும் இ சேவை மற்றும் ஆதார் ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டுமென கேட்டும் மேலும் தமிழக அரசு ஆதார் மற்றும் இசேவை ஊழியர்களின் கீழ்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்றும் TACTV நிர்வாக இயக்குனர், தொழில்துறை செயலாளர் மற்றும் தமிழக முதல்வர் அவர்களுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.  

 கோரிக்கைகள்பின்வருமாறு.

  • அரசு அலுவலகத்தில்   பொதுமக்களை நேரடியாக அணுகி  மனுக்களை   பெறுவதால் அனைவர்க்கும் PPE கிட் பாதுகாப்பு உடை வழங்க வேண்டும்.
  • போதிய அளவு மாஸ்க், சானிடைசர், கிளவுஸ் போன்ற உபகரணங்களை இருப்புவைக்க வேண்டும்.
  • ஊழியர்களுக்கு பிடித்தம் இல்லாமல் முழு சம்பளம் வழங்க வேண்டும் மற்றும் பணி பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  • ஊழியர்கள் மையங்களுக்கு பணிக்கு செல்ல உரிய பயணப்படி வழங்கிடு,
  • ஊரடங்கு காலத்தில் மற்றும் கொரோனா தொற்று நோயால் மரணமடைந்தால் அவருடைய குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் வழங்கிட வேண்டும், மருத்துவ காப்பீடும் உறுதி செய்ய வேண்டும்,

நன்றி

இப்படிக்கு,

இளங்கோ. ஆ 

இணை செயலாளர், UNITE 

9944102550