UNITE IT மற்றும் ITES உழியர்களின் பிரட்சணைகளை தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் மாநாட்டில் முன்வைத்து விவாதித்து, தீர்மானம் நிறைவேற்றியது.
UNITE முன்முயற்சி எடுத்து IT மற்றும் ITES உழியர்களின் பிரட்சணைகளை தமிழகத்தை சேர்ந்த 677 தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் மாநாட்டில் முன்வைத்து விவாதித்து, கீழ்வரும் தீர்மானம் ஒருமதாக நிறைவேற்ற பட்டது.
—–
ஐடி துறை மற்றும் ஐடி சார்பு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பணிபாதுகாப்பை உறுதி செய்!

தமிழகத்தில் சென்னை கோவை, சேலம், பாண்டிச்சேரி, திருச்சி, திருநெல்வேலி மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தகவல் தொழிற்நுட்ப துறையில் சுமார் 6.5 லட்சம் இளம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் இவற்றில் 38 % பெண் ஊழியர்களாவர். இந்த துறை சார்பாக ரூ.1.5 லட்சம் கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்திய தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தபடுவதில்லை. ஆட்டோமேஷன், கிளௌட் கம்ப்யூடிங், செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின் போன்ற நவீன தொழிற்நுட்ப வளர்ச்சி காரணமாக வேலையிழப்பு கட்டாய வேலைநீக்கம் வேலைபறிப்பு போன்ற நிகழ்வுகள் தீவிரமாக அரங்கேறி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் டிசிஎஸ், விப்ரோ, சிடிஎஸ் மற்றும் எச்சிஎல் போன்ற பல நிறுவனங்கள் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். வேலையில் இருக்கும் தொழிலாளர் வேலைப்பளு கூடி கொண்டே மற்றும் வேலை நேரம் கூடி கொண்டே செல்கிறது. அதே வேளையில் ஆண்டுக்கு ஆண்டு தொழிலாளர்கள் வேலை திறன் ஆய்வு என்ற பெயரில் ஊதியம் உயர்வு மறுப்பதும், சில நிறுவனங்களில் ஊழியர்களின் ஊதியம் குறைத்தும் தனது லாபத்தை 25% நிலையில் பாதுகாத்து வருகிறது.
தகவல் தொழில்நுட்ப துறையில் காண்ட்ராட் மற்றும் பிக்சிட் டெர்ம் ஒப்பந்தமுறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன விசாக கமிட்டி செயலற்ற நிலையில் இருக்கிறது. அரசும் இதன்மீது மௌனமாக உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் புகார் அளித்தால் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.
ஐ.டி துறையின் இன்னோர் பகுதியாக இருக்கும் தனியார் ITES துறையில் AI, ML, Automation போன்ற பல காரணங்களால் பலர் வேலை இழக்கின்றன.இது மட்டும் அல்லாமல் முறையான வேலை நேரம் மற்றும் வேலை சூழல,பணி பாதுகாப்பு இல்லாமல் பலர் வேலை செய்கின்றன. ITES துறையில் எந்த முறையான ஊதிய முறைகள் இல்லை அதனால் பலர் மிக குறைந்த ஊதியத்தில் 4000, 6000 ருபாய் சம்பளத்திற்கு வேலை வாங்கபடுகின்ற.
ITES துறையில் கணிசமான பகுதியாக இருக்கும் தரவு உள்ளீட்டாளர்கள் வேலைநிலை( Data Entry Operaters) தமிழ்நாட்டில் இரண்டு லட்சம் பேர் உள்ளனர்.. இவர்களுக்கு முறையான எந்த ஊதிய வரம்போ குறைந்தபட்ச ஊதியமோ இல்லாத காரணத்தால் மிக எளிய முறையில் சுரண்டப்படுகின்றனர்.
இதற்கு அரசு துறை நிறுவனங்களும் விதி விலக்கு இல்லை. தமிழ்நாடு அரசு கேபில் கிழ் உள்ள இ சேவா மற்றும் ஆதார் மையங்களில் பணிபுரியும் Data entry operator பலர் மிக குறைந்த ஊதியத்தில், பணி பாதுகாப்பு இன்றி, கழிவறை இன்றி மிக மோசமான பணி சூழல் வேலை செய்கின்றன.
1) பணி நிரந்தரம் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் உறுதிப்படுத்த வேண்டும்.
2) பாலியல் புகார் விசாரிக்க முறையான விசாக கமிட்டி அமைக்க வேண்டும் மற்றும் அமைக்கப்பட்ட கமிட்டிகளை கண்காணிக்க வேண்டும்.
3) தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் automation மூலம் நடக்கும் வேலை இழப்பை தடுத்து அரசு reskilling செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4) Data Entry Operators மற்றும் ITES தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.
5) தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்.
6) லாபத்திற்கு ஏற்ப ஊதிய உயர்வு நிர்ணயிக்க வேண்டும்.
7) தமிழகத்தில் தகவல் தொழிற்நுட்ப ஊழியர்களுக்கு இந்திய தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தமிழக அரசின் ஐடி கொள்கை 2018 அவனம் படி ஸ்டாண்டிங் ஆர்டர் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
என்று சிஐடியு 14வது மாநில மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.